Tuesday, October 5, 2010

அசோகன் பேசுகிறான் மீண்டும்.....

எஇ
வரலாறுகள் மாற்றி எழுத முடியாதவை ....கடந்த சில காலங்களில் பல ரணங்களை எமக்குள்ளே விட்டு சென்ற எமது தேசத்தின் அழிவுகளும் கூட..இறந்து கொண்டு இருக்கிறோம் என்பதை தவிர எதையுமே அறிந்திராமல் இறந்து போனது எத்தனை பேர்.... அதன் வலிகள் என்னை இன்றுவரை சுகமாக தூங்க விட்டதில்லை.... புத்தம் இந்த உலகிற்கு பரவியது அசோகனின் மூலமே...... அன்பு ஒன்றை தவிர ஏதும் இல்லை இவ்வுலகில் பெரிதாக என்ற வார்த்தை எல்லாம் பொய்த்து போனது எம் மண்ணில்... தமிழனை கொள்வோம்.... தமிழனை கொள்வோம்.... தாரக மந்திரம் இதுவென சொல்வோம் என்று கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய வில்லை தமிழனுக்காக சிங்கள அரசு...
எல்லாம் முடிந்தது தடையங்களும் அழிந்தது ... இன்று சில அசோக மனங்கள் மட்டும் உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு இருக்கின்றது போலும்... அவ்வாறே ஒரு ஊனமுற்ற ஒரு சிங்கள ரானுவனின் வெளி சொல்ல முடியாத புலம்பல்... மீண்டும் அசோகனாய் பேசுகிறான் புத்தரிடம்...

தேவா.......... முதியோர் ,காயமுற்றோர் ,மற்றும் நோயாளிகள்
குழந்தைகள்-வயது வந்தோர் பிணக்குவியலாய்
நிறைய நிறைய கண்ணுற்றேன்....
பாவங்களை ஊக்குவிக்கும் துறவிகளின் உருவங்களையும் கண்டேன்
பிரித் நூலும் கட்ட பட்டது
நாட்டை காக்கும் எனக்கு காவல் கிட்ட வேண்டும் என..
விழி சதை இரத்தம் என்று அனைத்தையும் தானம் செய்து
வந்துள்ளேன் உன் முன்பு...

ஆனாலும் புத்தரே உங்களது பார்வை மகிமை மிக்கது...
இங்கு உள்ளவர்களுக்கு மறந்து பூயிருக்கும்
தங்கள், மற்றும் பிள்ளைகளின் நலம் வேண்டி பாடும் சுக பிரார்த்தனை பாடலிடையே....
என்னால் மட்டும் உணர முடிகிறது எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்த விழிகள்.


கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லபட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த அவர்கள்
மெலிந்தவர்கள் துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம் ஒரே உருவம் எல்லோருக்குமே எனது முகம்
நூறு ஆயிரமென நான் கொன்று அழித்திருப்பது என்னையே தானா.....

பாளி செய்யுள் இசைக்கும் சிறிய பிக்குகள்
பின்னால் இருந்து நீங்கள் தரும் புண் முறுவல் தெரியாமல் இருக்க
என் விழிகளை இருக்க மூடி கொண்டே இருக்கிறேன்....
அதை பார்க்கும் அருகத அற்றவன் நான்.
தேவா என் இரத்த கரங்கள் தெரியாமல் இருக்க
உன்னை வணங்க கூட கை தூக்காமல் இருக்கிறேன் நான்.

மகேஷ் முனசிங்க...
தமிழில் : ரிஷான் செரிப்

பாவங்கள் செய்து முடித்த பின்தான் ஏனோ இந்த அசோகர்களுக்கெல்லாம் ஞானம் பிறக்கிறது....

No comments:

Post a Comment